

கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள தி.நகர் எம்எல்ஏ சத்யா, மட்டன் சாப்பிட்டதால் மட்டை யாகிட்டேன். ஜீரணமாகாததால் நடைப் பயிற்சி செய்வதாக தெரிவித்தார்.
கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் 7-வது நாளாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தால் அப்பகுதி தினமும் பரபரப்பாக காணப்படுகிறது. இதனால், விடுதியில் நடைபெறும் செய்திகளை சேகரிப்பதற் காக பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் எம்எல்ஏக் கள், அவ்வப்போது விடுதியில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏ சத்யா விடுதியின் முகப்பில் இருந்த செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, ‘காலை யிலேயே சிற்றுண்டியுடன் வேலூ ரில் இருந்து கொண்டு வரப்பட்ட மட்டன் பரிமாறப்பட்டது. ருசி யாக இருந்ததால், அதிகமாக சாப்பிட்டு மட்டையாகிவிட்டேன். ஜீரணமாகாததால் விடுதி வளாகத்தில் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். பன்னீர்செல்வம் தரப்பினர் பல்வேறு கட்டு கதைகளை அவிழ்த்துவிட்டு வருவதால் விடுதியில் நடந்ததை நான் கூறினேன்’ என்றார்.