

பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவை கள் பாதிக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது.
வங்கித் துறையில் மத்திய அரசின் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். வங்கிப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. வாராக் கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன்களை திருப்பி செலுத்தாதவர் கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 28) நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத் தப் போராட்டத்தில் ஈடுபடு கின்றனர்.
இதில், 10 லட்சம் வங்கி ஊழி யர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்ற னர். தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக காசோலை பரி வர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கிப் பணிகளும், சேவைகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை உரு வாகியுள்ளது.
மாதத்தின் கடைசி நாள் என்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதி யம் வழங்குவதும் பாதிக் கப்படும் என தெரிகிறது.