

தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்பு களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங் களுக்கான கலந்தாய்வில் 26 பேர் அனுமதிக் கடிதம் பெற்றனர்.
தமிழகத்தில் 9 தனியார் மருத் துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 73 மருத் துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டில் முதல்முறையாக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் அரசு கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன.இந்தக் கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதில் 725 பேர் வரவில்லை. 75 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் 26 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் பெற்றனர். 49 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றும் நடக்கிறது
தனியார் மருத்துவக் கல்லூரி களின் நிர்வாக ஒதுக்கீட்டு பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான கலந் தாய்வு இன்று பகல் 11 மணி வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க 1,800-க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பிறகு, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதல்கட்ட கலந்தாய் வில் காலியாக இருந்த 2 இடங் கள், தனியார் பல் மருத்துவக் கல் லூரிகள் மற்றும் அண்ணா மலை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
2-ம் கட்ட கலந்தாய்வு
இதைத் தொடர்ந்து, மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு 24-ம் தேதி (நாளை) தொடங்கி 27-ம் தேதி வரை நடக்கிறது.
அப்போது, அரசு மருத் துவக் கல்லூரிகளில் முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக இருந்த 40 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், அண்ணாமலை பல் கலைக்கழகத்தின் அரசு ஒதுக் கீட்டு இடங்களுக்கான கலந் தாய்வு நடக்க உள்ளது.