

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலை யம் அருகேயுள்ள செல்போன் கோபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறினர்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண் டும் என வலியுறுத்தினர். மேலும், மத்திய, மாநில அரசுகளை கண் டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இதையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்து இளைஞர்கள் கீழே இறங்கினர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே நேற்று காலை திடீரென இரு மாணவிகள் உட்பட 10-கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.