

யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள் என்று ஓபிஎஸ் அணியில் இணைந்த நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.
சசிகலா அணியில் இருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி தற்போது ஓபிஎஸ் அணியில் இணைந்திருக்கிறார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா உயிர் இருக்கும் வரை போயஸ் கார்டன் பக்கம் ஓ.பன்னீர்செல்வத்தை வரவிடாதவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓபிஎஸ்ஸை துரோகி என்று சொல்கிறார்கள். யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கு சந்தேகம் உள்ளது.
உண்மையான விசுவாசத்தோடு இருப்பவர்களின் பக்கம் நான் இணைந்துள்ளேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் அமோக வெற்றி பெறுவார். அதற்காக நாங்கள் உழைப்போம். மக்களின் அபிமானத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கொண்டுபோய் சேர்ப்ப்போம். ஜெயலலிதாவின் ஆசி எங்களுக்கு உள்ளது'' என்று நிர்மலா பெரியசாமி கூறினார்.