ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி: உதகையில் ஒருவர் கைது: ரூ.40 லட்சம் தப்பியது

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி: உதகையில் ஒருவர் கைது: ரூ.40 லட்சம் தப்பியது
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் யுகோ வங்கி ஏடிஎம் உள்ளது. கடந்த 25-ம் தேதி காலை இந்த ஏடிஎம் இயந் திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் உதகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.மகேஷ்குமார்(28) என்ற இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

உதகை நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.மணிகண்டன் கூறியதாவது:

யுகோ வங்கி ஏடிஎம்மில் வெளிப் புறம் தெரியாத வகையில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு மகேஷ்குமார், முகத்தை மூடிய படி ஏடிஎம் மையத்தினுள் சென்று இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்துள்ளார். ஆனால், அது பலன் அளிக்காததால் திரும்பி விட்டார். இயந்திரத்தில் சுமார் ரூ.40 லட்சம் இருந்துள்ளது. வங்கி அதிகாரிகளின் புகாரின்பேரில் 3 சிறப்புக் குழுக்கள் அமைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. அப்போது நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார்தான் குற்றவாளி எனத் தெரிய வந்ததால், இன்று (நேற்று) கைது செய்யப்பட்டார்.

அனைத்து வங்கிகள் ஏடிஎம்களி லும் கருப்பு நிற ஸ்டிக்கரை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற் போது நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதால், வங்கிகள் தங்கள் ஏடிஎம்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை அப்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களுடன் இணைத்தால், கொள்ளைச் சம்பவங்கள் தவிர்க்கப்படும், பாதுகாவலர்கள் தேவையில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in