

‘தி இந்து’ குழுமம் மற்றும் ஹமாம் இணைந்து தொடங்கியுள்ள, 10 கடலோர மாவட்டங்களில் ஒரு லட்சம் வேப்பமரக் கன்றுகள் நடும் திட்டத்தை, சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு விரி வாக்கம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழகத்தைத் தாக்கிய வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் சுமார் 2 லட்சத் துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்ததில், பசுமை போர்வை குறைந்து, வெப்பம் அதி கரித்துள்ளது. மேலும் விழுப் புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய கடலோர மாவட்டங்களும் புயலால் பசுமையை இழந்துள்ளன.
அதனால், தமிழகத்தின் மேற் கூறிய 10 கடலோர மாவட்டங்களில் இழந்த பசுமைப் போர்வையை மீட்டெடுக்க, ‘தி இந்து’ குழுமம் மற்றும் ‘ஹமாம்’ நிறுவனம் சார்பில் தமிழ் புத்தாண்டு தினமான கடந்த ஏப்.14-ம் தேதி, பசுமைப் புத்தாண் டாகக் கொண்டாடப்பட்டது. அன்று, ஒரு லட்சம் வேப்பமரக் கன்றுகளை நடும் திட்டமும் தொடங்கப்பட்டது.
கச்சிதமான, முழுமையான, எளிதில் அழியாத மரம் என்று வேப்ப மரத்தை ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. மோசமான சூழ் நிலைகளில் இருந்து இயற்கை யாகவே எளிதில் மீண்டுவிடக் கூடியது இந்த மரம். வேப்ப மரத் துக்கு மிகக் குறைந்த நீரே போதும். அனைத்து வகை மண்ணிலும் வளரும். பூச்சிகள் - நோய்க் கிருமிகளுக்கு எதிரான தற்காப்பைக் கொண்டது. மண் வளத்தையும், நீர்ப் பிடிப்பு திறனை யும் மேம்படுத்தும். அதனால் வேப்ப மரக்கன்றுகள் தேர்வு செய் யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 10 கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட் களுக்கு முன்பு வரை 28 ஆயிரம் வேப்பமரக் கன்றுகள் நடப்பட்டுள் ளன. இவ்வார இறுதிக்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்ட மிடப்பட்டுள்ளது. உலக சுற்றுச் சூழல் தினமான ஜூன் 4-ம் தேதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மேலும் விரிவாக் கும் விதமாக, சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட மதுரை, ஈரோடு, சேலம் ஆகிய 3 மாவட் டங்களில் பசுமைப் போர்வையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், இந்த 3 மாவட் டங்களிலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேப்பமரக் கன்றுகள் நடப்பட உள்ளன.