Published : 27 Aug 2016 10:47 AM
Last Updated : 27 Aug 2016 10:47 AM

சென்னையில் இன்று கி.ரா.வுக்கு இலக்கிய சாதனை விருது

தமிழின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான கி.ராஜநாராயணனுக்கு, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத் தின் ‘இலக்கியச் சாதனை சிறப்பு விருது 2016’ வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா சென்னை யில் இன்று (ஆகஸ்ட் 27) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

ரஹ்மத் அறக்கட்டளையும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழும் இணைந்து நடத்தும் இந்த விழா சி.ஐ.டி. காலனி 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது.

எழுத்தாளர் கழனியூரன் கி.ரா.வுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். கி.ரா.வுக்குப் புகைப்பட ஆவணம் ஒன்றை உரு வாக்கிய புகைப்படக்காரர் புதுவை இளவேனில், அவரைப் படம் எடுத்த கதையைப் பகிர்ந்து கொள்கிறார். கி.ரா.வின் படைப்புலகம் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுகிறார். ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஏ.முஸ்தஃபா விருதை வழங்குகிறார். இதில் கி.ரா.வைப் பற்றிய காணொளிக் காட்சியும் திரையிடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x