

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டை கடந்த 1-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல் போனுக்கு குறுஞ்செய்தியாக வரும். அக்குறுஞ்செய்தி வரப் பெற்ற 7 நாட்களுக்குள், பழைய குடும்ப அட்டை, அலைபேசி குறுஞ்செய்தியுடன், சம்பந்தப் பட்ட நியாய விலைக்கடையை அணுகி, மின்னணு குடும்ப அட் டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
குடும்ப அட்டையுடன் ஆதார் எண், அலைபேசி எண் பதிவு செய்யாதவர்கள், தற்போது பதிவு செய்து, மின்னணு குடும்ப அட்டை பெறலாம்.
இ-சேவை மையம், சம்பந்தப் பட்ட வட்ட வழங்கல் அலுவலகத் துக்கு இணைய வழியில் அனுப்பி வைக்கும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங் களின் அடிப்படையில் இணைய வழியிலேயே வழங்கல் துறையி னர் ஒப்புதல் வழங்குவர்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது, குடும்ப உறுப்பினர் பெயர் சேர்க் கப்பட்ட, நீக்கப்பட்ட, திருத்தப் பட்ட, புதிய மின்னணு குடும்ப அட்டை தொடர்பான தகவல் செல் போனுக்கு வரும்.