

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கும் சஞ்சய் கிஷன் கவுலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற் றிய சஞ்சய் கிஷன் கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக் கப்பட்டிருக்கிறார். அடுத்த சில நாட் களில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ள அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இரண்டரை ஆண்டு களாக அவர் சிறப்பாக பணியாற்றினார். இந்தக் காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி யையும், ஒழுங்கையும் நிலைநிறுத்திய கவுல், உயர் நீதிமன்றத்தின் மாண்பை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தினார். ஊழல் புகார்களுக்குள்ளான கீழமை நீதிபதிகள் 9 பேரை பணிநீக்கம் செய்தார். தமிழக வரலாற்றில் ஊழல் நீதிபதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். 22 வயதில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய கவுல் 42 வயதில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
மிகவும் இளம் வயதில் உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பை ஏற்ற இவர், சில ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆனால், மிகவும் தாமதமாகத்தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். எனினும், இன்னும் 7 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற முடியும் என்பதால் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்க இவரால் முடியும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.