சென்னையில் நாளை தமிழர் உரிமை மாநாடு: சீதாராம் யெச்சூரி, துரைமுருகன், திருமாவளவன் பங்கேற்பு

சென்னையில் நாளை தமிழர் உரிமை மாநாடு: சீதாராம் யெச்சூரி, துரைமுருகன், திருமாவளவன் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னையில் நாளை நடைபெறும் தமிழர் உரிமை மாநாட்டில் சீதாராம் யெச்சூரி, துரைமுருகன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கமும் (தமுஎகச), இந்திய மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாய்வில் தமிழர்களின் நாகரிகத்துக்கான அடையாளங்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இந்த அகழ்வாய் வுக்கு மத்திய அரசு தடை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன. இந்நிலையில் கீழடி மண்ணைப் பாதுகாக்கவும், இந்தி திணிப்பை எதிர்க்கவும் தமிழர் உரிமை மாநாட்டுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் மாநாட்டில், ‘இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாறு', ‘கீழடி தொல்லியல் அகழ்வாய்வு’ ஆகிய இரு தலைப்புகளில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள் ளன. கீழடியிலிருந்து பிடிமண் எடுக்கப்பட்டு மாநாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அதனை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலை வர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக் கொள்கிறார்.

எம்பிக்கள் டி.கே.ரங்கராஜன், கனிமொழி, எழுத்தாளர் பிர பஞ்சன், தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பேசுகின்றனர். மேலும் ‘இந்தித் திணிப்பும், எதிர்ப்பும்’, ‘இன்றைய சவால்களை எதிர்கொள்ள’, ‘கீழடி என்ன சொல்கிறது?’ என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பிரபலங்கள் கருத்துரை வழங்குகின்றனர்.

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சார்பில் புத்தக அரங்கம் அமைக்கப்பட உள்ளது. அதில் ‘தி இந்து’ சார்பில் அச்சிடப் பட்ட நூல்கள், 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in