நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்: பாஜக பொதுக்குழுவில் தீர்மானம்

நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்: பாஜக பொதுக்குழுவில் தீர்மானம்
Updated on
1 min read

மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்த, மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தமிழக பாஜக மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. நேற்றைய கூட்டத்தில் தேசிய செயற் குழு உறுப்பினர் திருமலைசாமி தீர்மானங்களை முன்மொழிந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் உள்ளது. கணிசமான மின்சாரம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து பெறப்படுகிறது.

மின் தேவைகளை பூர்த்திசெய்ய புதிய மின்திட்டங்களை தொடங்கவும், கிடப்பில் உள்ள செய்யூர், உப்பாறு மின் உற்பத்தி திட்டங்களை உட னடியாக செயல்படுத்தவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் திட்டங் களை மத்திய அரசு செயல் படுத்த, மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.

மத்திய அரசு நடை முறைப்படுத்தி உள்ள மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு தொலை நோக்கு அடிப்படையில் சிறப் பானது. அதே நேரம் தமிழக மாண வர்களின் நலன்கள் பாதிக்காத வகையில், தமிழக அரசு மாண வர்களின் திறன்களை மேம்படுத்த உரிய கல்வித்திட்டத்தை வகுத்து செயல்படவேண்டும்.

பழநியை புனித நகரமாக அறி வித்து போக்குவரத்து, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதோடு, பக்தர்கள் தரிசனம் பெற கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யவேண் டும் என்பன உட்பட ஏழு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை வகித் தார். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கயிறு வாரியத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசியச் செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், கர்நாடகா எம்எல்ஏ ரவி, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in