தியாகி சங்கரலிங்கனார், கட்டபொம்மனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தியாகி சங்கரலிங்கனார், கட்டபொம்மனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
Updated on
1 min read

விருதுநகரில் தியாகி சங்கரலிங்க னார் மற்றும் கயத்தாறில் வீரபாண் டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு ரூ.1.97 கோடியில் கட்டப்பட்ட மணிமண்டபங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நம் மாநிலத்துக்கு சென்னை மாகாணம் என இருந்த பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி விருதுநகரில் ரூ.77 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், ஆங்கிலேயர் ஏகாதி பத்தியத்தை எதிர்த்தவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி - கயத்தாறில் மணி மண்டபம் அமைக்க முதல் வர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக் கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம் மன் மணிமண்டபத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந் திரபாலாஜி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், செய்தித் துறை செயலர் மூ.ராஜாராம், செய் தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுரு பரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in