Published : 31 Jan 2017 08:56 AM
Last Updated : 31 Jan 2017 08:56 AM

தென்னிந்தியாவில் முதல் முறையாக லேப்ராஸ்கோப்பி முறையில் கல்லீரல் தான அறுவை சிகிச்சை: ஜெம் மருத்துவமனை சாதனை

தென்னிந்தியாவில் முதல் முறையாக லேப்ராஸ்கோப்பி முறையில் கல்லீரல் தான அறுவை சிகிச்சை செய்து கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

கேரள மாநிலம் பாலக் காட்டைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (48). இவரது கல்லீரலில் அதிகப் படியான கொழுப்பு சேர்ந்த தால், கல்லீரல் சுருங்கி செய லிழந்துவிட்டது. மேலும் கல்லீரலில் புற்றுநோய் கட்டி யும் இருந்தது. கோயம் புத்தூரில் உள்ள ஜெம் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்ட இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் திட்டமிட்டனர். பால சுப்பிரமணியத்தின் மனைவி ஷீபா தனது பகுதி கல்லீரலை கணவருக்கு தானமாக கொடுக்க முன்வந்தார். இதையடுத்து ஜெம் மருத் துவமனை தலைவர் டாக்டர் சி.பழனிவேலு தலைமையில் டாக்டர்கள் லேப்ராஸ்கோப்பி (சிறுதுளை அறுவை சிகிச்சை) முறையில் ஷீபா விடம் இருந்து வலது பக்க கல்லீரலை எடுத்தனர்.

இதையடுத்து மெதந்தா மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.எஸ்.ஷாயின், டாக்டர் சஞ்சய் கோஜா, ஆனந்த் விஜய் ஆகியோர் கொண்ட குழுவினர் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பாலசுப்பிரமணியத்துக்கு அந்த கல்லீரலை பொருத்தினர்.

இதுகுறித்து ஜெம் மருத்துவ மனை தலைவர் டாக்டர் சி.பழனிவேலு கூறும்போது, “தென்னிந்தியாவில் முதல் முறையாக லேப்ராஸ் கோப்பி முறையில் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் கல்லீரலை தானம் கொடுத்த பெண்ணுக்கு அதிக ரத்தம் வெளியேற்றமோ, வலியோ இருக்காது. சில நாட்களில் முழுமையாக குணமடைந்து வேலைகளை செய்யத் தொடங்கலாம்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x