

மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமகக் குளத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று, மாசி மகப் பெருவிழா கொண்டாடப்படு கிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகப் பெருவிழா வாகக் கொண்டாடப்பட்டு வரு கிறது.
10 நாள் உற்சவம்
மாசிமகப் பெருவிழாவை முன் னிட்டு கடந்த 2-ம் தேதி ஆதிகும் பேஸ்வரர் உள்ளிட்ட 5 சிவாலயங் களில் 10 நாள் உற்சவம் தொடங்கி யது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வ நாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ் வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களில் இருந்து சுவாமி- அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமகக் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.
பின்னர், அந்தந்த கோயிலின் அஸ்திரதேவர்கள், சிறப்பு அபிஷே கத்துக்குப் பின், மகாமகக் குளத்தில் நீராடினர். அதைத் தொடர்ந்து, மகா மகக் குளத்தில் ஏராளமான பக்தர் கள் புனித நீராடினர். தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணி முதல் மாலை வரை சுமார் 50 ஆயிரம் பேர் புனித நீராடி னர். பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீ ஸார், தீயணைப்பு வீரர்கள், அற நிலையத் துறையினர், மருத்துவக் குழுவினர், வருவாய்த் துறையினர் இணைந்து செய்திருந்தனர்.
தேரோட்டம்
சக்கரபாணிசுவாமி, ராஜ கோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் கோயில்களில் கடந்த 3-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாள் உற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்று உபநாச்சி யாருடன் சக்கரபாணி சுவாமி தேருக்கு எழுந்தருளினார். பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
தொடர்ந்து மாலை சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதி வராக பெருமாள் தாயாருடன் காவிரிக் கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார்.
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் இருந்து, தாயாருடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்துக்கு எழுந்தருளினார். பொற்றாமரைக் குளத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத் தால் நிலைத் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை மற்றும் அகில பாரத துறவியர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட துறவியர் பச்சையப்பன் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மகாமகக் குளத்தில் ‘கூடிப்பிரார்த்திப்போம் இயற்கையை ஆராதிப்போம்’ என்ற கருத்தை மையமாகக்கொண்டு மகா ஆரத்தி நடைபெற்றது.