Published : 13 Sep 2016 07:30 AM
Last Updated : 13 Sep 2016 07:30 AM

நடிகர் ரஜினிகாந்த் வீடு, கர்நாடக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு

கர்நாடகாவில் நடைபெற்று வரும் கலவரங்களின் எதிரொலியாக சென்னையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் வீடு மற்றும் கன்னட மக்களின் சொத்துகளுக்கு போலீஸார் பாது காப்பை பலப்படுத்தியுள்ளனர்.

காவிரி விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர் கள் தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களின் சொத்துகள் மற்றும் வணிக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள், லாரிகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக, மயிலாப் பூரில் உள்ள கர்நாடக உரிமை யாளரின் ஓட்டல் நேற்று காலை தாக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கன்னட மக்கள் மற்றும் அவர்களது சொத்துகளை பாதுகாக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் பேக்கரி, வங்கி, ஓட்டல் என 171 இடங்களில் கன்னடர்களின் வணிக நிறுவனங் கள் உள்ளன. மேலும், கர்நாட கத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினி, ரமேஷ் ஆனந்த் மற்றும் நடிகைகள் பலரும் சென்னையில் வசிக்கின்றனர். அவர்களுக்கு சொந்தமாக வீடுகள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவையும் உள்ளன. இவற்றுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். குறிப்பாக ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 150 வாகனங்களில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x