

சர்வதேச யோகா தினம் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று பல்வேறு துறைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்திய ராணுவத்தின் சார்பில் பாம்குரோவ் சுற்றுச்சூழல் மையத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில், தென்பிராந்திய தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த் உட்பட 500-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கலந்து கொண்டனர். கடற்படை தலைமை யகமான ஐஎன்எஸ் அடையாறு வளாகத்தில் நடந்த யோகா தின கொண்டாட்டத்தில் தலைமை அதி காரி ரியர் அட்மிரல் அலோக் பட் நாகர், கடற்படையினர், மற்றும் அவர் களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்சிசி இயக்குநரகம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் என்சிசி துணை டைரக்டர் ஜெனரல் கமோடர் விஜேஸ் கே.கார்க், கேப்டன் தினேஷ் சூரி உள்ளிட்ட அதிகாரிகளும், என்சிசி மாணவர்களும் கலந்துகொண்டனர். கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்தியம் சார்பில் மீனம்பாக்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஐஜி ராஜன் பார்கோத்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்தியன் வங்கி, கிருஷ்ணமாச் சாரி யோக மந்திரம் அமைப்புடன் இணைந்து ராயப்பேட்டையில் அதன் தலைமை அலுவலகத்தில் யோகா நிகழ்ச்சியை நடத்தியது. இதில், வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகள்
சர்வதேச யோகா தினத்தை முன் னிட்டு, சென்னை அரசு பொது மருத் துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர் களுடன் இணைந்து பொதுமக்களும் யோகா பயிற்சி செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவ கண்காணிப்பாளர் நாராயணசாமி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறைத் தலைவர் ஆர்.அம்பிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மற்றும் செவிலியர் மாணவ, மாணவிகள் நேற்று யோகா பயிற்சியில் ஈடுபட் டனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் மருத்துவமனையின் டீன் டாக்டர் பி.வசந்தாமணி தலைமை யில் நடந்த யோகா விழிப்புணர்வு பேரணியில் துணைமுதல்வர் டாக்டர் சி.ஹேமசந்திரிகா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் டாக்டர் ஆர்.பிரவீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போலா மருத்துவமனையில் டாக்டர் நிதி சவுத்ரி, டாக்டர் வசந்தி ஆகியோர் தலைமையில் சிறப்பு பயிலரங்கம் நடந்தது. தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா மற்றும் தக்கர் பாபா அகாடமி பள்ளியில் இ.வாசு தேவன் தலைமையில் நடைபெற்ற யோகா கொண்டாட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் ஐடிஐ மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை ஐஐடியில் டீன் (மாண வர் நலன்) எம்.எஸ்.சிவகுமார் தலை மையில் விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் இணை பதி வாளர் (மாணவர்கள்) லெப்டினென்ட் கர்னல் ஜெயகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ரயில் நிலையம்
சர்வதேச யோகா தினத்தையொட்டி, ரயில்வே போலீஸ், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர் களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீ ஸார் யோகா நிகழ்ச்சி நடத்தினர்.
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது. நிறுவனத்தின் இயக்குநர் பானுமதி தலைமை தாங்கினார். கருவூலம் மற்றும் கணக்குத் துறை பிரதான செயலாளர் மற்றும் ஆணையர், டி.எஸ்.ஜவகர், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சித்த மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர். “வளமான வாழ்வுக்கு யோகா” என்ற தலைப்பில் நடைபெற்ற பயில ரங்கில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கே.ஆனந்த கண்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி இதய நலத்துறை முன்னாள் தலைவர் டாக்டர் வி.சொக்கலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.
சென்னை கிழக்கு முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், 5001 மாணவர் கள் தண்ணீர் பாதுகாப்பின் அவசி யத்தை வலியுறுத்தும் வகையில் “SAVE WATER” என்ற ஆங்கில வார்த்தை வடிவத்தை உருவாக்கிய படி யோகாவில் ஈடுபட்டனர்.