அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தக் கூடாது: தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை

அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தக் கூடாது: தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தும் திட்டத்தை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலக சங்கம்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு வரும் 16-ம் தேதி சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இதில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம் என அரசு

ஊழியர்கள் மத்தியில் பேசப்படு கிறது. இது தொடர்பாக தலைமைச் செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன், செயலாளர் கு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் தொடர்பாக, கடந்தசட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் விதமாக, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அலுவலர் குழு அமைக்க உத் தரவிட்டுள்ளதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டிலேயே தமிழக அரசுதான், சமூக நீதியை பாதுகாக்கும் விதமாக 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மத்திய அரசு கடந்த 1998-ல் அதன் ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தியுள்ளது.

ஆனால், மத்திய அரசு ஊழியர்களின் செயல்பாடும், மாநில அரசு ஊழியர்களின் செயல்பாடுகளும் வெவ்வே றானவை. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும் மாநில அரசு ஊழியர்களின் பணியாகும்.

இந்நிலையில், மத்திய அரசை பின்பற்றி, தமிழக அரசும் ஊழியர் களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்,2 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக அனைத்து அரசுப் பணியிடங் களையும் நிரப்ப முடியாத சூழல்ஏற்படும்.

வேலையில்லா இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கும். தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பி்ன்னடைவாக அமையும். எனவே,அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in