

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா நேற்று காலை ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ‘சின்னம்மா வாழ்க’ என்று கோஷமிட்டபடி போயஸ் தோட்ட பகுதிக்கு சிலர் வந்தனர். அவர்கள் திடீரென்று தங்கள் கையில் வைத்திருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்துக்கு தீ வைக்க முயன்றனர். இதைப் பார்த்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் போயஸ் தோட்ட பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.