நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது: பி.ஆர்.எஸ். சட்ட ஆய்வு அமைப்பு கருத்து

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது: பி.ஆர்.எஸ். சட்ட ஆய்வு அமைப்பு கருத்து
Updated on
1 min read

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எம்எல்ஏக்களிடம் ரகசியவாக்கெடுப்பு நடத்த முடியாது என பி.ஆர்.எஸ் சட்ட ஆய்வுஅமைப்பின் தலைவர் பி.ஆர்.மாதவன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18 ஆம் தேதி நடந்த வாக்கெடுப்புகுறித்து ‘தி இந்து’ இணையதளத்திடம் அவர் கூறும்போது, “கடந்த 1988-ல்சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்புடன் தற்போது நடந்த வாக்கெடுப்பை ஒப்பிட முடியாது. ஏனெனில், அதில் கிடைத்தவாக்குகள் வெறும் 98. ஆனால் இப்போது பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட கூடுதலாக (112) கிடைத்துள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் வாக்களிக்காததும்ஒரு பிரச்சினை அல்ல. காரணம், அவைக்கு தேவையானஎம்எல்ஏக்களுடன் (கோரம்) வாக்கெடுப்புநடத்தப்பட்டுள்ளது. எனவே இதை ஆளுநர் ஏற்க முடியாதுஎனக் கூற வாய்ப்பில்லை. அப்படி கூறினால், அதை எதிர்த்துநீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம்அளித்திருந்தாலும் அவர் மறுநாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதிலும் தவறு இல்லை. ரகசியவாக்கெடுப்பு என்பது குடியரசுத் தலைவரைதேர்ந்தெடுக்கும்போது மட்டுமே நடைபெற வேண்டும். மற்றநேரங்களில், பொதுமக்களை போல் ரகசிய வாக்களிக்கும் உரிமை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இல்லை. இவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வது, அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் ஜனநாயக உரிமை. இதனால் அவர்கள் ரகசியமாக வாக்களிக்க முடியாது.

முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரைந்து நிரந்தரமுதல்வரை அமர்த்துவது அவையின் கடமை ஆகும். இனிபழனிசாமிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவுஎம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்பாக பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம்கோரிக்கை விடுத்தால், அதை அவர் நிறைவேற்றுவார். அதேசமயம், அதிமுக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை தேர்தல் ஆணையத்தால் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்பி.ஆர்.எஸ். சட்ட ஆய்வு அமைப்பு, ஒரு பொதுநலஅமைப்பாகும். நாடாளுமன்றத்தில் இரு அவைஉறுப்பினர்களின் நடவடிக்கைகள் மற்றும் அங்குநிறைவேற்றப்படும் சட்டங்களை ஆராய்ந்து இந்த அமைப்பு பொதுமக்களுக்கு அளித்து வருகிறது.

இத்துடன் நாட்டின்பல்வேறு மாநில சட்டப்பேரவைகளின் நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்து தகவல் வெளியிட்டு வருகிறது. இவற்றின் மீது நாடு முழுவதிலும் கருத்தரங்குகள், பொதுவிவாதங்களும் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வுஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான பி.ஆர்.மாதவனை போல் சர்வதேச கல்வி நிலையங்களில்பயின்ற அறிஞர்கள் பலர் இந்த அமைப்பில் பணியாற்றிவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in