

காரைக்கால் மாவட்டம் கீழக்காசாகுடியில், காரைக்கால் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் விதமாக, ‘அனைவரும் இணைவோம், அனைவரும் வளர்வோம்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓஎன்ஜிசி காவிரிப் படுகை செயல் இயக்குநர் குல்பீர்சிங் தலமை வகித்தார்.
இதில், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
ஓர் அரசின் 3 ஆண்டுகால செயல்பாடுகளை, சாதனைகளை மக்களிடம் நேரடியாகச் சென்று பேசக்கூடிய துணிச்சல் பாஜக அரசுக்கு மட்டுமே உண்டு. பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனம் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.
நாம் வெளிநாடுகளிலிருந்து எரிபொருளை அதிகம் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளோம். இதை 10 சதவீதமாவது குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் எண்ணத்தின் அடிப்படியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சில செயல் பாடுகளை முன்னெடுத்து வரு கிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியது: மத்திய அரசைப் பொறுத்தவரை பூமிக்கு அடியி லிருந்து எடுக்கக் கூடிய எந்தவொரு பொருளாக இருந்தாலும் அந்தப் பகுதி மக்களுக்கு எந்த பாதிப் பும் ஏற்படாத வகையிலான முயற்சிகள் மட்டுமே மேற் கொள்ளப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக கிளப்பப்படும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்.
மத்திய அரசு யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத் தில் 5 முறை ஆட்சி செய்த திமுக, தனது அடித்தளத்தை இழந்து வருகிறது. அதிமுக பல்வேறு கூறுகளாக பிரிந்துள்ளது. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரே கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது.
புதுச்சேரி மக்கள் வளர்ச் சியை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு அரசும், அரசியல்வாதிகளும் நடந்து கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு விஷயத்தில் தலையிட்டு செய்த நடவடிக்கைகள் தெரியும். மக்கள் அதை விரும்புகிறர்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது என்று மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர் என்றார்.