

திமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திக தலைவர் கி.வீர மணி, விசிக தலைவர் திருமா வளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளி யிட்ட அறிக்கைகள் பின்வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளி செய்வது உண்டு. ஆனால், அங்கு எந்த நடவடிக் கையும் எடுக்கப்படுவதில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் நடைபெறும் விவாதங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் எல்லாமே ஜனநாய கத்தின் ஒரு அங்கமாகும். இதனைக் கூட சகித்துக்கொள்ளாமல் தமிழக சட்டப்பேரவைத் தலை வர் நடந்துகொண்டிருப்பது எதேச் சதிகாரமானது. இதனை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாகக் கண்டிக்கிறது. பேரவைத் தலைவர் தனது நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஒரு வார காலத்துக்கு திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டப் பேரவைத் தலைவர் இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று திமுகவின் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அதற்குச் சட்டப்பேரவைத் தலை வர் தனது முடிவை திரும்பப் பெற மறுத்துவிட்டார். சட்டப் பேரவைத் தலைவரின் இந்த பிடிவாதப்போக்கு ஏற்புடைய தல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மசோதாக்கள் குறித்து விவாதிப் பதற்கு உரிய சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
திக தலைவர் கி.வீரமணி:
சட்டப்பேரவைத் தலைவர் என்பவர் ஆளுங்கட்சி ஆதரவான வர் இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்புக்கு பொதுவாகவே அவர் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தலை வரின் செயல்பாடுகள் ஒருதலை பட்சமாக இருப்பதாக வெளிப் படையாகவே தெரிகிறது. திமுக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்துள்ளது ஏற்புடையதல்ல.சட்டப்பேரவைத் தலைவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெற வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய் யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை யிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் செல்வதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி வழங்கப் படவில்லை. இந்த நடவடிக்கைகள் சட்டப்பேரவையின் மாண்புக்குக் கொஞ்சமும் உகந்தவையல்ல. இடைநீக்கத்தை ரத்துசெய்து சட்டப்பேரவை அமைதியாக நடை பெற பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.