வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் லேசான மழை வாய்ப்பு
Updated on
1 min read

மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஒரிஸா, வடக்கு ஆந்திர கடற்கரையையொட்டி பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பதால் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

''மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஒரிஸா, வடக்கு ஆந்திர கடற்கரையையொட்டி பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பதால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், தென்தமிழகத்தில் சில இடங்களிலும் லேசான மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in