Published : 01 Jan 2016 09:11 AM
Last Updated : 01 Jan 2016 09:11 AM

தேர்தலுக்கு தயாராகிறது பாமக: பொங்கலுக்கு பிறகு விருப்ப மனு பெறப்படும் - ராமதாஸ் தகவல்

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட பாமக சார் பாக விருப்ப மனுக்கள் பெறப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் ‘2016-ஐ வரவேற்போம், 2015-க்கு விடை கொடுப்போம்’ என்ற நிகழ்ச்சி பாமக சார்பில் நேற்று நடைபெற்றது. அதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் வரும் சட்டப்பேர வைத் தேர்தலில் பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. ‘மாற்றம், முன்னேற்றம்’ ஆகிய 2 வார்த்தைகளை கூறி பாமக ஆட்சியைப் பிடிக்கும். நமது செயல் திட்டம் குறித்த துண்டு அறிக்கை களை 5.62 கோடி தமிழக மக்களிட மும் கொண்டு சேர்க்க வேண்டும். ஹைடெக் பிரச்சாரம் மூலம் பாமக பணியாற்ற உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியைப் போல, தமிழகத்தில் பாமக மாற்றத்தை ஏற் படுத்தும். தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு விருப்ப மனுக்களை ரூ.5 ஆயிரம் செலுத்தி தைலாபுரத்தில் வழங்கலாம். நாங் கள் என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து, தமிழக மக்க ளிடம் ஒரு தேர்தல் ஒப்பந்தம் போடப்போகிறோம் என்றார்.

கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, கனமழைக்குப் பிறகு மக்கள் அதிமுகவை முற்றிலும் புறக்கணித்துள்ளதால் பாமகவுக்கு போட்டியாக தேர்தலில் சரியான போட்டி கட்சிகள் இல்லை.

கூட்டணிக்கு யார் வந்தாலும் சந்தோஷம், வராவிட்டாலும் வருத்தம் இல்லை. எங்களுக்கு தாய்மார்கள் மேல் நம்பிக்கை உள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு இரு கட்சிகள் மீதும் மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அதிமுக எவ்வளவு போராடினாலும் டெபாசிட் வாங்க முடியாது. திமுக மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

மழைக்கு முன்பு அதிமுகவும், பாமகவும் போட்டியில் இருந்தன. கனமழைக்குப் பிறகு அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர். நமக்கு போட்டியே இல்லை. 5 மாதங்களில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைப்பது உறுதி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x