Published : 15 Aug 2016 08:40 AM
Last Updated : 15 Aug 2016 08:40 AM

தமிழகத்தை சேர்ந்த 25 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

சிறப்பாக பணி செய்த தமிழகத்தைச் சேர்ந்த 25 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் சிறப்பாக பணி செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு, சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் விருது வழங்கப்படும்.

அதன்படி, இந்த முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 25 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழகத்தில் பணியாற்றும் கூடுதல் டிஜிபி (காவலர் நலன்) கன்னு சரன் மாஹாளி, சென்னை தலைமையிடம் கூடுதல் காவல் ஆணையர் சு.அருணாசலம், சென்னை காவல் கண்காணிப்பாளர் (சிறப்பு பிரிவு) க.சங்கர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவ ரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது தமிழக காவல் துறையில் பணியாற்றும் 22 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

காவல்துறை ஐ.ஜி (சென்னை செயலாக்கம்) எச்.எம்.ஜெயராம், திருச்சி ஐஜி ஆ.அருண், கரூர் டிஐஜி சந்திரசேகர், வேலூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை (தளவாய்) ஜெ.ரவீந்திரன், சென்னை பரங்கிமலை ஆயுதப்படை துணை ஆணையர் வ.ஜெயக்குமார், திருவண்ணாமலை மாவட்டம் தலைமையிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மா.ரங்கராஜன், முதல்வரின் தனிப்பிரிவு பாதுகாப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ந.ராஜராஜன், மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு, குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .மாரிராஜன், திருச்சி குற்ற ஆவண காப்பகம் துணை கண்காணிப்பாளர் வே.மதி, சென்னை மேற்கு மண்டல ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சரக உதவி ஆணையர் கே.பரந்தாமன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (சென்னை 2) காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.விஜய ராகவன், மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மு.முத்து சங்கரலிங்கம், திருச்சி கன்டோன்மென்ட் குற்ற சரக உதவி ஆணையர் கு.அருள் அமரன், சென்னை காவல் துறை தலைமையிட கட்டுப்பாட்டு அறை துணை கண்காணிப்பாளர் கோ.ராஜசேகர், சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் ச.முத்துக்குமார், சென்னை ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை துணை கண்காணிப் பாளர் கே.ரவி, கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு பொ.பரமசிவன், ஈரோடு கொடுமுடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சு.முருகேசன், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை இன்ஸ்பெக்டர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பழனி 14-ம் அணி இன்ஸ்பெக்டர் பெ.பெரிய சாமி, சென்னை காவல் தொலை தொடர்புத் துறை இன்ஸ்பெக்டர் ம.பாஸ்கரன், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆர்.கேசவரம்.

இந்த தகவல் தமிழக போலீஸ் டிஜிபி அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x