

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்பப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிரிக்கெட் வல்லுநர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் முன்வைக்கும் பெயர்... விராட் கோலி.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், 'மன்னர்' சச்சின் இடத்தை 'இளவரசர்' கோலி நிரப்புவார் என்று என்று வர்ணனையுடன் அழுத்தமாகச் சொல்கிறார்.
அத்துடன், சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறார் என்பதற்காக நிம்மதிப் பெருமூச்சு விடவேண்டாம்; அவரைப் போலவே விராட் கோலியையும் அணுக வேண்டியது அவசியம் என்று ஆஸ்திரேலிய அணிக்கு அறிவுத்துகிறார் இயான் சேப்பல்.
எதிரணி நிர்ணயித்த அதிக ரன் இலக்கை சேஸ் செய்வதில், தற்போதைய இந்திய அணியில் விராட் கோலிக்கு பெரும் பங்கு இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் என்ற சச்சினின் உலக சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டிருந்தார்.
சரி, உங்கள் பார்வையில், சச்சின் இடத்தை கோலி நிரப்புவதற்கு வாய்ப்புண்டா? இல்லையா? பின்னணி மற்றும் காரணங்களுடன் விவாதிக்கலாம் வாங்க.