

கோடநாடு பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த அதிநவீன சென்ஸார் கதவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொள்ளை குறித்து 4 மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இந்த பங்களாவில் கோவை சரக டிஐஜி தீபக் எம் தமோர் மற்றும் நீலகிரி எஸ்பி முரளிரம்பா தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா தரப்பினரிடம் அனுமதி பெற்ற பின் இந்த சோதனை நடைபெற்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தங்கும் அறைகள் மட்டுமின்றி, பங்களாவில் உள்ள முக்கிய அறைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தங்கும் அறைகளில் உடைந்துகிடந்த பீரோக்கள், டேபிள்கள் மற்றும் சில சூட்கேசு களை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ததாக தெரிகிறது. நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை பிற்பகல் வரை நீடித்துள்ளது.
ஜெயலலிதா விரல் ரேகை
பங்களாவை சுற்றியுள்ள பகுதி கள், கொலை நடந்த இடம் மற்றும் எஸ்டேட்டுக்குச் செல் லும் வழித்தடங்கள் போன்ற இடங் களிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும், கோடநாடு பங்களா வில் உள்ள பெரும்பாலான அறை களின் கதவுகள் சென்ஸார் முறை யில் அமைக்கப்பட்டிருந்ததாக வும் எஸ்டேட் ஊழியர்கள் தெரி வித்தனர்.
குறிப்பாக, ஜெயலலிதா பயன் படுத்தும் அறைகள் அனைத்திலும் சென்ஸார் முறையே இருந்ததாம். அந்த அறைகளில் ஜெயலலிதா விரல் ரேகை வைத்தால் மட் டுமே திறக்கும் வசதி செய்யப் பட்டிருந்ததாம். ஆனால், அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த 2 மாதங்களில் எஸ்டேட் மற்றும் பங்களாவில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்ட நிலை யில், இந்த சென்சார் கதவுகளும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
எஸ்டேட் ஜப்தி?
ஜெயலலிதா உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த 4 மாதங்களில் கோடநாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள் ளன. அவரது அறைகளில் இருந்த தாக கூறப்படும் சொத்து ஆவணங் கள், தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் ஏற்கெனவே வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் இந்த எஸ்டேட் இணைக்கப்பட்டுள்ளதால், எஸ்டேட்டை நீதிமன்றம் ஜப்தி செய்யலாம் என்ற நிலையும் உள்ளது.