

சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களில் பணிபுரியும் மகளிர் குழு பணியாளர்களுக்கு காப்பீடு மற்றும் சேமநல நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேயர் சைதை துரைசாமி பேசும்போது, “அம்மா உணவகம் செயல்பாடுகள் பற்றி தணிக் கைத் துறை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. சமுதாய பாதுகாப்பு திட்டத் தின் கீழ் அம்மா உணவகங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மா உணவகங்களில் பணிபுரியும் குழு பணியாளர்களுக்கு காப்பீடு மற்றும் சேமநல நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.