

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேர ளம் அணை கட்ட முடிவு செய்தி ருப்பதைக் கண்டித்து கொங்கு மண்டல மக்களை திரட்டி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நாமக்கல்லில் பல்வேறு கட்சி களைச் சேர்ந்தோர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் திமுக மக்கள் பணி யாற்றும். சட்டப்பேரவைத் தலைவர் இந்த ஆட்சிக்கு துதி பாடுபவராக உள்ளார். இதுபற்றி மக்களிடத்தில் எடுத்துச் சொல்லத்தான் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படு கிறது.
சட்டப்பேரவை ஆளுங்கட்சி யான அதிமுக கூட்டம் நடத்தும் மன்றமாக உள்ளது. அதை எண்ணி வேதனைப்படுகிறோம். தவறை சுட்டிக்காட்டுவதை, சட்டப்பேர வைத் தலைவர் விரும்புவதில்லை. மாறாக எங்களை வெளியேற்றுவது தான் நடக்கிறது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டப் போவதாக கேரள அரசு முடிவு செய்துள்ளது. அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக் கும்படி தமிழக அரசுக்கு, கேரள அரசு தொடர்ந்து கடிதம் எழுதி யது. எனினும், தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பவில்லை. முல்லை பெரியாறு, காவிரி பிரச் சினை குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை.
சிறுவாணி ஆற்றில் கேரளம் அணை கட்டுவதால் கொங்கு மண்டல விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். விரைவில் கொங்கு மண்டல மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இந்த ஆட்சிக்குக் கடிவாளம் போடும் வகையில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசி னார்.
கூட்டத்தில், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.எம்.செல்வ கணபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன், பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.