

பெங்களூரு விமான நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை காக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு, பிரசாதப் பொருட்களுடன் சென்னைக்கு பயணிக்க பெங்களூரு விமான நிலையத்துக்கு சென்றபோது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், கோயில் பிரசாதப் பொருட்களை அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக இளையராஜா அளித்த விளக்கத்தை ஏற்காமல் அவரை ஒரு மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.