

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:
மது இல்லாத தமிழகத்தை உரு வாக்க, சுற்றுச்சூழல் மாசில்லாத தமிழகம் உருவாக மாணவர்கள் செயல்பட வேண்டும்.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், பாம் பாற்றின் குறுக்கே அணை கட்டினால் கரூர் உள்ளிட்ட மாவட் டங்களுக்கும் தண்ணீர் கிடைக் காமல் போய்விடும். நதி நீர் பிரச்சி னைகளில் அண்டை மாநிலங்களால் தமிழகத்துக்கு காத்திருக்கும் ஆபத்தை மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட முந்தைய காங்கிரஸ் தலைமையி லான மத்திய அரசும், அதில் அங்கம் வகித்த திமுகவுமே காரணம். கடந்த 2009-ல் அப்போதைய முதல் வர் கருணாநிதி, ஒரு சட்டம் கொண்டு வந்தார். ஆனால், அதற்கு மத்திய அரசின் அனுமதியோ, குடியரசு தலைவரின் ஒப்புதலோ பெற முயற்சி பெறவில்லை. அதனால்தான் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஜல்லிக்கட்டுக்கான போராட் டத்தின்போது மாணவர்களை கட் டாயப்படுத்தி போலீஸார் அப்புறப் படுத்தியது சரியல்ல. மாணவர் களின் போராட்டத்தில் கல வரத்தைத் தூண்டியது யார் என்பது குறித்து முதல்வர் தனது பதிலுரை யில் தெளிவாகக் கூற வேண்டும். அதேபோல, போராட்டத்தின்போது, சில இடங்களில் காவல்துறையினரே தீ வைத்த காட்சிகள் வெளியாகி உள்ளன. அவர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.