ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக கைதான 27 இளைஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக கைதான 27 இளைஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
Updated on
1 min read

சென்னை மெரினாவில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கடந்த 23-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர் களை போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதனால் நகரில் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் கலவரம் ஏற்பட்டது.

கலவரத்தில் ஈடுபட்டதாக மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன், தமிழரசன், அருண் குமார், கபூர் ஹசன், சுகுமார் உள்ளிட்ட 27 பேரை மயிலாப் பூர் போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் சார்பில் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது முன்பாக நேற்று நடந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் ஆஜராகி, ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் கிடையாது. அவர் கள் கலவரத்துக்கு காரண மான சமூக விரோதிகள். போலீஸ் நிலையத்தை தீக்கிரையாக்கினர். போலீஸ் வாகனங்களையும் எரித்துள்ள னர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் ஜி.மோகன கிருஷ்ணன், ‘‘கைது செய்யப் பட்டவர்களில் சுகுமாரைத் தவிர மற்றவர்கள் மாணவர்கள் கிடையாது. அப்பகுதி இளை ஞர்கள். இவர்களை போலீ ஸார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்,

ஆனால், இவர்கள் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் கிடையாது. கலவரத்துக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நசீர் அகமது, ‘‘கைது செய்யப்பட்டுள்ள நபர் கள்தான் கலவரத்தில் ஈடுபட் டார்கள் என்பதற்கு எந்த ஆதா ரமும் இல்லை. எனவே, இந்த 27 பேருக்கும் நிபந்தனை அடிப் படையில் ஜாமீன் வழங்கப்படு கிறது. ரூ.10 ஆயிரம் பிணைத் தொகையுடன் இருநபர் உத்தர வாதம் அளித்து ஜாமீனில் செல்லலாம். மறுஉத்தரவு வரும் வரை இவர்கள் அனை வரும் செங்கல்பட்டில் தங்கி யிருக்க வேண்டும்’’ என நிபந்தனை விதித்தார்.

இதேபோல, மெரினா கடற் கரை போலீஸாரால் கைது செய் யப்பட்ட 29 பேரில் தமிழ்மணி, கார்த்திக், கண்ணையா, ஜோசப் உள்ளிட்ட 8 பேர் ஜாமீன் கோரி இதே நீதிமன்றத் தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீர்அகமது, இது தொடர் பாக போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.28-க்கு தள்ளிவைத்தார்.

மேலும் இந்த 8 பேர் சார்பில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in