அதிமுகவுக்கு உரிமை கோரும் தீபா: பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்கிறார்

அதிமுகவுக்கு உரிமை கோரும் தீபா: பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்கிறார்
Updated on
1 min read

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அதிமுகவுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணை யத்தை நாடுகிறார். அவரது தரப்பில் பிரமாண பத்திரங்களும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப்பின், அதிமுக 2 ஆக பிளவுபட்டது. ஓபிஎஸ், முதல்வர் கே.பழனிசாமி ஆகி யோர் தலைமையில் தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இத்துடன் டிடிவி தினகரன் தலைமையில் புதிதாக ஒரு அணியும் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப் பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி மனு அளித்துள்ளது. இதையடுத்து கட்சிப் பெயர், இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைத்த தேர்தல் ஆணையம், இது தொடர் பாக ஜூன் 16-ம் தேதிக்குள் (நாளை) கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணிகளுக்கு தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தியிருந்தது.

இதற்கான காலக்கெடு நெருங்கியுள்ள நிலையில், முதல்வர் கே.பழனிசாமியின் அதிமுக அம்மா கட்சி சார்பில் நேற்று 47 ஆயிரம் பிரமாண பத் திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவர் கள் தரப்பில் இதுவரை 3 லட் சத்து 98 ஆயிரம் நிர்வாகிகள், தொண்டர்களின் பிரமாண பத் திரங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் கூடுதலாக லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கியுள்ள ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபாவும் அதிமுகவுக்கு உரிமை கோரி களமிறங்கியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தையும் அவர் நாடுகிறார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைமை செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பசும் பொன் பாண்டியன், நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, கடலூர் வெங்கடாசலபதி, காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச் சந்திரன் ஆகியோர் பிரமாண பத்திரங்களுடன் விமானத் தில் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இன்று காலை 10 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, ஒரு லட்சம் பிரமாண பத்திரங்களை வழங்குகின்றனர். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். தங்கள் அணியை அதிமுகவாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோர உள்ளதாக தீபா பேரவையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in