Published : 13 Jan 2017 10:10 AM
Last Updated : 13 Jan 2017 10:10 AM

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் காலமானார்

சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர், ச.வே.சுப்பிரமணியன்(87) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை நெல்லை அருகே தமிழூரில் காலமானார்.

திருநெல்வேலி - வீரகேரளம் புதூரில் பிறந்த அவர், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, பாளை. புனித சவேரியார் கல் லூரி, திருவனந்தபுரம் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ் பேராசிரி யராக பணிபுரிந்தார். இதன் பிறகு, சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்று ஓய்வு பெற்றவர்.

ஓர் அமுதசுரபி உடைந்துவிட்டது

கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் செய்தி: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக அவர் இருந்தபோது பதிப்பித்த நூல்கள் தமிழுக்குக் கிடைத்த செல்வங்கள். ‘தமிழூர்’ என்ற ஊரையே நிறுவி தன் வாழ்வின் பிற்பகுதியை வேளாண்மையில் கழித்தவர். பன்மொழி புலமையா ளர், அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x