

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் முன் னாள் பிரதமர் இந்திரா காந்தி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய தாவது:
காமராஜர் தமிழகத்தின் முதல்வ ராக 9 ஆண்டுகள் இருந்தார் என்றால், விடுதலை பெறுவதற்கு முன் வெள்ளையர்களை எதிர்த்து 10 ஆண்டுகள் சிறையில் இருந்த வர். ஆனால் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பங்காளியை கொன்றதற்காக ஜெயிலுக்கு சென்று வந்தவர்.
இந்திரா காந்தி, காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்களும், இன்றைக்கு நாட்டை கொள்ளையடிப்பவர் களும் ஒன்றா? இவர்களுக்கு மக்கள் பாடம் கற்பித்தே தீர வேண்டும். நாட்டை கொள்ளை யடித்தவர்களும், ஊழல் செய் பவர்களும்தான் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்றால் சசிகலாவின் பினாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தற்போது தேர்தல் ஆணையம் அதிமுகவின் சின்னத்தை முடக்கிவிட்டது. இடைத்தேர்தலின் முடிவில் தமிழக மக்கள் அதிமுகவையே முடக்கிவிட்டனர் என்ற செய்தி கட்டாயம் வரும்.
காமராஜர் ஆட்சி செய்தபோது தமிழகம் அனைத்துத் துறை களிலும் முதலிடத்தை பெற்று இருந்தது. ஆனால் இன்று லஞ்ச, லாவண்யத்தில் பெருத்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்ற கேவலமான நிலைமை ஏற் பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் இளங்கோவனை எச்சரிக்கிறோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். நீங்கள் இப்படி பேசினால் உங்களைப் பற்றி இன்னும் பல விஷயங்களை வெளியே சொல்வோம். மறைந்த ஜெயலலிதாவை பார்த்தே பயப் படாதவன் நான்.
நாங்கள் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள். அதிமுகவில் உள்ளவர்கள் அரசி யலை ஒரு பிழைப்பாக செய்ப வர்கள். நாங்கள் நாட்டை காப் பாற்றுவதற்காக அரசியலில் இருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்தி ருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.