

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக் களில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 561 பேரூ ராட்சிகள், 32 மாவட்ட பஞ்சாயத் துகள், 385 பஞ்சாயத்து யூனியன் கள், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
2001- மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி இந்த உள்ளாட்சி தேர்தலை தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை யிலேயே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசிய லமைப்புச் சட்டத்துக்கு விரோத மானது. ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் தொகுதிகளை மறு வரையறை செய்து சுழற்சி அடிப் படையில் பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பி னருக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்க வேண்டும்.
2001 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏதுவாக கடந்த 22.6.16 அன்று நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த தமிழ்நாடு நகராட்சி சட்டம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் ஆகியவற்றில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தங்களை அறிமுக நிலையிலேயே திமுக எதிர்த்தது. எனவே அந்த சட்ட திருத்தங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் ஆளுங் கட்சியினர் முறைகேடு புரிய வாய்ப்புள்ளதால் மாநகராட்சி, நகராட்சிகளில் பயன்படுத்தப் படுவது போல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப் பஞ் சாயத்துகளிலும் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவை நடத்த வேண்டும்.
வெளிமாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை வைத்து தேர்தலை நடத்த வேண்டும். குறிப்பாக அவர்களை தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும். எல்லா வேட்பு மனுக்களையும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பஞ்சாயத்து தலைவர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அனைத்து தேர்தல் முடிவுகளை யும் ஒரே நேரத்தில் எண்ண வேண் டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம், சட்டத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை செயலர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.