Published : 04 Jun 2016 07:47 AM
Last Updated : 04 Jun 2016 07:47 AM

கருணாநிதியின் 93-வது பிறந்த நாள்: அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து - பெரியார், அண்ணா நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நேற்று தனது 93-வது பிறந்த நாளை கொண்டாடினார். காலை 7 மணிக்கு சிஐடி காலனி வீட்டில் அரச மரக்கன்றை நட்ட அவருக்கு துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித் தனர்.

பின்னர், கோபாலபுரம் இல்லத் துக்கு வந்த கருணாநிதிக்கு, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கருணா நிதிதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

காலை 8 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி கருணாநிதி மரியாதை செலுத்தினார்.

பின்னர் வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினை விடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செய லாளர் துரை முருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

காலை 9 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநில எஸ்.சி. பிரிவுத் தலை வர் செல்வப்பெருந்தகை உள்ளிட் டோர் கருணாநிதிக்கு அவரது கோபாலபுரம் இல்லத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கருணாநிதியுடன் காலை சிற் றுண்டி சாப்பிட்டனர்.

ரூபாய் நோட்டு மாலை

காலை 11.10 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதி காலை 11.15 முதல் பகல் 12.30 மணி வரை திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வாழ்த்துக் களைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், உழவர் உழைப் பாளர் கட்சித் தலைவர் கு.செல்ல முத்து, கவிக்கோ அப்துல் ரகு மான், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, ஜெகத் ரட்சகன், மாநிலங்களவை உறுப் பினர் திருச்சி என்.சிவா, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட் டோர் அப்போது அருகில் இருந் தனர்.

திருவண்ணாமலை தொண்டர் ஒருவர் கருணாநிதியின் 93-வது பிறந்த நாளை குறிக்கும் வகை யில் ரூ.93 ஆயிரம் மதிப்புள்ள ரூ.10, ரூ.20 நோட்டுகளால் ஆன 93 அடி நீள மாலையை அணிவித்தார். செவ்வாழைத் தார், பழக் கூடைகள், பணம், வெள்ளிப் பொருட்கள் என பல்வேறு பரிசுப் பொருட்களை தொண்டர்கள் வழங்கினர்.

ஆளுநர் ரோசய்யா வாழ்த்து

93-வது பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதிக்கு ஆளு நர் கே.ரோசய்யா வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகி யோர் கருணாநிதிக்கு தொலை பேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x