

இலங்கையில் நடந்த இனப்படு கொலை குறித்து பன்னாட்டு சுதந்திர புலனாய்வு நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று அனைத்திந்திய மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
அனைத்திந்திய மனித உரிமை அமைப்புகள் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டம் சென்னையில் ஞாயிரன்று நடந்தது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலர் சுரேஷ், தமிழக மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமைக் கழக நிர்வாகி கவிதா ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய செயலர் சுரேஷ் கூறியதாவது:
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, உலகளவிலான சுதந்திர புலனாய்வு நடத்த வேண்டும் என, ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது நடந்துவருகிற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. அத்தீர்மானம், இலங்கை இனப்படுகொலை தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் போல் கடைசியில் நீர்த்துப் போகும் வாய்ப்புள்ளது.
எனவே, இலங்கையில் நடந்த போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித குலத்துக்கெதிரான குற்றம் தொடர்பாக, பன்னாட்டு சுதந்திர புலனாய்வு நடத்த, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும். அத்தீர்மானத்துக்கு மற்ற நாடு கள் ஆதரவளிப்பதற்கான ஏற்பாடு களையும் இந்தியா செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக் குப் பிறகு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில், தெற்காசியாவில் இனப்படுகொலை என்ற தலைப் பில், டெல்லியில் மாநாடு நடத்த மக்கள் சிவில் உரிமை கழகம் திட்டமிட்டுள்ளது. தெற்காசியாவின் அனைத்து மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கை மற்றும் இந்தியா வைச் சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.