Published : 03 Mar 2017 09:29 AM
Last Updated : 03 Mar 2017 09:29 AM

கோடை மழையை எதிர்பார்த்து ஊசலாடும் மா விளைச்சல்: மரங்களை காப்பாற்ற தவிக்கும் விவசாயிகள்

முக்கனிகளில் முதல் கனியான மாம் பழத்தை பார்த்ததுமே எல்லோருக் கும் வாங்கி சாப்பிட கொள்ளை ஆசை ஏற்படும். அதனால், குழந்தை கள் முதல் பெரியோர் வரை ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம் சீஸனை எதிர்பார்த்து காத்திருப் பார்கள். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் நிலவும் கடும் வறட் சிக்கு மா மரங்களும் தப்பவில்லை.

பரவலாகவே மா மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதால் இந்த ஆண்டு மா சீஸனில் மா விளைச்சல் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும், கோடை மழை சிறிதளவில்கூட பெய்யா விட்டால் மா மரங்களைக் காப்பாற் றவே முடியாத அபாயம் உள்ள தாகவும் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது காணப் படும் வறட்சி, மா மரங்களுக்கு உகந்ததுதான் என்றும், இந்த சீஸனில் மா விளைச்சல் அதிக ரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தோட் டக்கலைத் துறை அதிகாரிகள் விவ சாயிகளுக்கு நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து மதுரை தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது:

தமிழகத்தில் 2 லட்சம் ஹெக்டே ருக்கு மேல் மா விவசாயம் நடக்கி றது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக் டேரில் மா சாகுபடி செய்யப்படு கிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பழைய மாந்தோப்புகள் உள்ளன. மற்ற மாவட்டங்களில் சமீப காலங்களில் மாந்தோப்புகள் புதி தாக உருவாக்கப்பட்டவை. மதுரை மாவட்டத்தில் 6,256 ஹெக்டேரில் விவசாயிகள் மா சாகுபடி செய்துள் ளனர்.

மா விவசாயத்தை மேம்படுத்த வும், நவீனப்படுத்தவும் விரைவில் மதுரையில் மாங்கூழ் தொழிற் சாலைகள் கொண்டுவர பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. தற் போது நீடிக்கும் வறட்சி மா மரங்களுக்கு உகந்ததுதான். மா, முந்திரியைப் பொறுத்தவரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மரப்பயிர்கள். பூக்கிற தருணத்தில் வறட்சி இருக்க வேண்டும் என்பது இந்த மரங்களின் இயல்பான குணம். வறட்சி இருந்தால் மட்டுமே அதிகமாக பூக்கள் வரும்.

மேலும், பூக்கும்போது இந்த மரச் செடிகளில் தழைச்சத்து குறை வாக இருக்க வேண்டும். கார்பன் அதிகமாக இருக்க வேண்டும். கார்பனுக்கும், தழைச்சத்துக்குமான விகிதம் குறைவாக இருக்க வேண் டும். அதேநேரத்தில் மழையும் பெய்யக் கூடாது. தற்போது இயல்பாகவே இந்தத் தருணம் மா மரங்களுக்கு வறட்சியால் வாய்த்துள்ளது.

அதனால், இந்த ஆண்டு மரங் களில் பூக்கள், காய்கள் நன்றாக வந்துள்ளன. இந்த பூக்கள் அப் படியே பிஞ்சாகி நன்றாக பெருக்க ஒரு கோடைமழை தேவைப் படுகிறது. பெய்தால் இந்த சீசனில் எப்போதும் இல்லாத வகையில் மா மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாம்பழங்கள் சுவையாக வும் தரமாகவும் இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் கோடை மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மழை பெய்யாவிட்டால் காய்த்துள்ள காய்கள், பூத்துள்ள பூக்கள் உதிர ஆரம்பித்துவிடும். இதனால் மகசூல் குறையும் வாய்ப்பும் உள்ளது. தற்போது மா மரங்களில் தத்துப்பூச்சி விழும். சாம்பல் நோய் வரும். பூக்கள் பூத்துள்ள இந்த சூழலில் அவற்றை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரீல் 0.5 சதவீதமும், அதனுடன் நனையும் கந்தகம் 0.5 சதவீதமும் சேர்த்து தெளித்தால் இந்த பூச்சிகளையும், நோயையும் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மா விவசாயி அமலதாஸ் கூறும் போது, “எல்லா இடத்திலும் பூக்கள், காய்கள் நன்றாக வந்துள்ளன என சொல்ல முடியாது. விளைச்சல் ஒரு புறம் இருக்கட்டும். கோடை மழை பெய்யாவிட்டால் மரங்களையே காப்பாற்ற முடியாது’’ என்றார்.

மதுரை அருகே கண்ணனேந்தலில் உள்ள மா மரத்தில் பூத்து குலுங்கும் பூக்கள். படங்கள்: ஆர்.அசோக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x