

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திருநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் இளைஞர் பலியானார் 89 பேர் காயமடைந் தனர். ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத் தப்பட்டது.
இங்கு நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக் கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த 916 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதே போல, 503 மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களம்புகுந்தனர்.
காளைகள் வெளியேறும் பகுதி யான வாடிவாசலின் எதிர்திசை யில் பார்வையாளர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டனர். இதனால், வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் புகுந்தன. இதனால் காளைகள் முட்டியும், அங்குமிங்கு மாக ஓடியபோது கீழே இடறி விழுந்ததிலும் பார்வையாளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.
காளைகள் செல்வதற்கு இடை யூறாக நின்ற பார்வையாளர்களை அங்கிருந்து கலைந்துபோகுமாறு பல முறை அறிவிப்பு செய்தும் அவர்கள் கலைந்து செல்ல வில்லை. இதையடுத்து, சுமார் 345 காளைகள் அவிழித்துவிடப்பட்ட நிலையில், அலுவலர்களின் உத்தர வைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 90-க்கும் மேற்பட்டோ ருக்கு காயம் ஏற்பட்டது. இதில், ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் அருகேயுள்ள மாதிராம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கார்த்திக் (20) உள்ளிட்ட 31 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில், கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே ஜல்லிக்கட்டில் காளை கள் முட்டியதில் 3 பேர் பலியான நிலையில், திருநல்லூர் ஜல்லிக் கட்டில் ஒருவர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியது.