Published : 10 Aug 2016 08:33 PM
Last Updated : 10 Aug 2016 08:33 PM

இந்தியா- ரஷ்யா முயற்சியில் உருவான கூடங்குளம் திட்டம்: முதல் அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு- ரஷ்ய அதிபர், பிரதமர் மோடி, முதல்வர் ஜெ. பங்கேற்பு

கூடங்குளம் அணு மின் நிலை யத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங் குளத்தில் இந்தியா- ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப் பட்டுள்ளன. அதில் முதலாவது அணு உலையில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டு மத்திய மின் தொகுப்பில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

இந்த அணு உலையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மா ஸ்கோவில் இருந்தும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செய லகத்தில் இருந்தும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று, நாட்டுக்கு அர்ப்பணித் தனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசும்போது, “ரஷ்யாவுடன், இந்தியா கொண்டுள்ள நட்புறவின் வெளிப்பாடாக கூடங்குளம் முதலாவது அணு உலையை ஒன்றிணைந்து அர்ப்பணிக்கிறோம். பசுமையான வளர்ச்சிக்கு இரு நாட்டு நட்புறவும் வழிகோலும் என்பதற்கு இது அடையாளம்.

ரஷ்யாவின் அதிநவீன தொழில் நுட்பத்தில் இந்த அணு உலை அமைக் கப்பட்டிருக்கிறது. இது வெறும் கட்டு மானத்தையோ, மின் உற்பத்தியையோ மட்டும் கொண்டதாக இல்லாமல், உலகில் அணு மின் உற்பத்தித்துறையில் ரஷ்யா தலைசிறந்து விளங்குவதன் எடுத்துக் காட்டு. அந்த தலைசிறந்த தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் நாங்கள் பரிமாறிக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “இந்திய- ரஷ்ய கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்ட கூடங்குளம் முதலாவது அணு உலையில் இருந்து சுற்றுச்சூ லுக்கு மாசு இல்லாமல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமல் மின் உற்பத்தி செய்வதன் தொடர்ச்சி யான நடவடிக்கையாக அமைந்துள்ளது’’ என்றார்.

கூடங்குளம் மேம்பாடு

முதல்வர் ஜெயலலிதா பேசும் போது, “இத்திட்டத்தை செயல்படுத்த முழுமை யான ஒத்துழைப்பை எப்போதும் அளித்துள்ளேன். இத்திட்டத்தில் மின் உற்பத்தி வெற்றிகரமாக தொடங்கப் பட்டுள்ளது. சமூக சொத்துகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் எவ்வாறு மக்களின் அச்சத்தை போக்க முடியும் என்ற பாடத்தை இது நமக்கு அளித்துள்ளது. கூடங்குளத்தை சுற்றி உள்ள பகுதிகளின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

தமிழகத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்காகவும், தொழில் மற்றும் விவசாய பிரிவுகளின் தேவைக்காகவும், கூடங்குளம் அணு மின் நிலைய 2-வது அலகில் மின் உற்பத்தியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களுக்கு, கூடங்குளம் ஒரு நம்பகமான மின் உற்பத்தி நிலையமாக இருக்கும்’’ என்றார்.

கடந்து வந்த பாதை…

* 1988-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, சோவியத் குடியரசு அதிபர் கார்பசேவ் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ.13,500 கோடி யில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

* தலா 1,000 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகளை அமைக்கும் பணி கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங் கியது.

* 2013 அக்டோபர் 22-ம் தேதி முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்கியது.

* 2016 பிப்ரவரி 22-ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

* உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 563 மெகாவாட் கிடைக் கிறது. புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தெலங்கானா ஆகியவையும் பகிர்ந்து கொள்கின்றன. கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் எதிர்காலத்தில் அமைய உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x