புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஈவ் டீசிங்கில் ஈடுபட்டால் நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஈவ் டீசிங்கில் ஈடுபட்டால் நடவடிக்கை
Updated on
1 min read

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களை ஈவ்டீசிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகர மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். நட்சத்திர ஓட்டல்களும் ஆட்டம், பாட்டம் போன்ற வற்றிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இவை தவிர மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உட்பட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கலைநிகழ்ச்சி, நடனம், மது விருந்து என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாகன விபத்துகளை தடுக் கவும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்கவும் போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி முதல்கட்டமாக நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடு கள் பற்றி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல் மேனாஜர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடக் கும் நட்சத்திர ஓட்டல்களில்,

31–ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை நீச்சல் குளத்தை மூடிவிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இவை தவிர நடன நிகழ்ச் சிக்கு தற்காலிக மேடை அமைக்கக் கூடாது,நடன நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகில் மது அருந்தும் பார் இருக்கக்கூடாது. ஆபாச நடனத்தை அனுமதிக்கக்கூடாது. என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை நட்சத்திர ஓட்டல் களுக்கு விதிக்கப்பட் டுள்ளது.

இதே போல மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும் போது மேற்கொள்லவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித் தும் போலீஸார் திட்டமிட்டும் வருகி றார்கள்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புத்தாண்டு கொண்டாட்டம் 31-ம் தேதி மாலை தொடங்கி ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 1 மணி வரை அனுமதிக்கப்படும். சென்னை முழுவதும் வாகன சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பைக் மற்றும் கார்களில் அதிக அளவு வேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களை ஈவ் டீசிங் செய்பவர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், புத்தாண்டு கொண்டாட் டத்தில் எவ்வளவு போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் துவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in