

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2010-ம் ஆண்டு சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ‘‘கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கடன் சுமையில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. 2006-ல் ரூ.56 ஆயிரத்து 94 கோடியாக இருந்த தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன், தற்போது ரூ.90 ஆயிரம் கோடி யாக உயர்ந்துள்ளது. அதாவது தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக் கும் தலா ரூ.15 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரூ.15 ஆயி ரம் கடனோடு பிறக்கிறது’’ என்றார்.
ஆனால், தமிழகத்தின் உண்மை நிலை என்ன என்பதை ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தியுள்ளது.
நிதிப் பற்றாக்குறையில் இந்தியா விலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2015-16ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.31,870 கோடியாக உள்ளது. ரூ.31,560 கோடியுடன் உத்தரப்பிரதேசம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் நிதிப் பற் றாக்குறை 2014-15-ல் ரூ.27,350 கோடியில் இருந்து 2015-16ல் ரூ.31,870 கோடியாக அதிகரித்துள் ளது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க வேண்டும். ஒரு மாநிலத்தின் கடன் அளவை குறைக்க வேண்டுமானால் நிதிப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும்.
மத்திய அரசு தனது ஊழியர் களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. அதைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியர் களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப் பட வேண்டும். அவ்வாறு ஊதிய உயர்வு நடைமுறைப்படுத் தப்பட்டால் தமிழகத்தின் கடன்சுமை மேலும் அதிகரிக்கும்.
நிர்வாகத்தை மேம்படுத்தா விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் மீள முடியாத கடன் சுமையில் தமிழகம் சிக்குவது உறுதி. இந்த அபாயத்தில் இருந்து தமிழகத்தை காப்பதற்கான எந்த முயற்சியையும் அதிமுக அரசு எடுக்கவில்லை.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடனை ரூ. 4.48 லட்சம் கோடி யாக உயர்த்தியதுதான் அதிமுக அரசின் முதல் சாதனையாகும். இதுதான் அதிமுக அரசின் நிர்வாகத் திறமைக்கு சான்றாகும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.