வங்கி ஊழியர்கள் தேசிய மாநாடு சென்னையில் இன்று தொடக்கம்: 30 தீர்மானங்கள் இயற்ற முடிவு

வங்கி ஊழியர்கள் தேசிய மாநாடு சென்னையில் இன்று தொடக்கம்: 30 தீர்மானங்கள் இயற்ற முடிவு
Updated on
1 min read

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு எழுந்துள்ள பரபரப்பான சூழலில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 28-வது தேசிய மாநாடு சென்னையில் இன்று தொடங்கி, 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து, சென்னையில் நிருபர்களிடம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நேற்று கூறியதாவது:

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடந்த 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் தேசிய மாநாடு கடந்த 1989-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு சங்கத்தின் 28-வது தேசிய மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் 11-ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முதல்வர் பினராயி விஜயன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன், இந்திய வங்கிகள் கூட்டமைப் பின் தலைவர் ராஜீவ் ரிஷி, சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிக்கோஸ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் ராஜன் நாகர், ‘இந்து’ என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதி லும் இருந்து 6 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

பொதுத்துறை வங்கிகளை இணைக்கக் கூடாது, வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது, வங்கி களில் காலியாக உள்ள 2 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கூட்டுறவு வங்கிகளை மேம்படுத்த வேண்டும், பணத் தட்டுப்பாடு பிரச் சினையால் வங்கிகளின் செயல்பாடு கள் பாதிக்கப்படாமல் இருக்க போதிய பணப்புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட உள்ளன. இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in