

ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் சடலம் 4-வது நாளாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மர ணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி பல்வேறு கட்சியினரும் தின மும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவ தால், போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட் டிருந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி மரணம் அடைந்தார். சிறையில் மின் வயரை கடித்து அவர் தற் கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது. அவரது உடல் ராயப் பேட்டை மருத்துவமனையில் வைக் கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் பிரேதப் பரிசோதனை இன்று நடக்க இருந்தது.
இதற்கிடையில், ராம்குமார் சாவில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டிய அவரது தந்தை பரமசிவம், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். பிரேதப் பரிசோதனைக் குழுவில் தனியார் மருத்துவரை சேர்ப்பதில் நீதிபதிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத தால், பிரேதப் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், 4-வது நாளாக இன்றும் அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பல்வேறு கட்சி யினர் மருத்துவமனையை முற் றுகையிட்டதால் கூடுதல் காவல் ஆணையர் சங்கர் தலைமையில் 500 போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 70-க்கும் மேற் பட்டோர், பகுஜன் சமாஜ் கட்சியினர் பிரேதப் பரிசோதனைக் கூடம் முன்பு திரண்டு கோஷமிட்டனர். இதனால், அங்கு அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.