

பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் கடல் ஆராய்ச்சிக்கான ‘ஐஆர்என்எஸ்எஸ்-1சி’ செயற் கைக்கோள், வரும் 16-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற் கான 67 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று காலை 6.32 மணிக்கு தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), கடல் ஆராய்ச் சிக்காக ‘ஐஆர்என்எஸ்எஸ்-1சி’ என்ற செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி-சி26 ராக்கெட் மூலம் வரும் 16-ம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான, 67 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று காலை 6.32 மணிக்கு தொடங்கியது. ராக்கெட்டில் உள்ள 4 நிலைகளில் எரிபொருள் நிரப்பும் பணி நேற்று நிறைவடைந்தது. இத்தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது.
1,425.4 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்டது.