Published : 14 Mar 2014 12:39 PM
Last Updated : 14 Mar 2014 12:39 PM

கொள்ளையர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ.

செயினை பறித்துக் கொண்டு தப்பிய வழிப்பறி கொள்ளையர்களை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்தார் பெரவள்ளூர் உதவி ஆய்வாளர்.

சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் 4-வது பிரதான சாலையை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஜெயதேவி(34). இருவரும் வியாழக்கிழமை தங்களது வீட்டின் முன்பு நடந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜெயதேவி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க, அவர்கள் பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.

சம்பவ இடம் அருகே ரோந்து பணியில் இருந்த உதவி ஆய் வாளர் ராஜேந்திர பிரசாத், கொள் ளையர்களின் அடை யாளங்களை கேட்டுக் கொண்டு, அவர்கள் சென்ற வழியில் தனது மோட்டார் சைக்கிளி ல் உடனே விரைந்து சென்றார்.சிறிது தூரத்திலேயே கொள் ளையர்களை அடையாளம் கண்டுகொண்ட ராஜேந்திர பிரசாத், அவர்களை பிடிக்க முயற்சித்தார்.

ஆனால் போலீஸ் பிடிக்க முயற்சிப்பதை அறிந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றனர். பெரம்பூர் மேம்பாலம் வரை விரட்டிச் சென்று, கொள்ளையர்களின் வாகனத்தை தனது மோட்டார் சைக்கிளால் இடித்துத் தள்ளி இருவரையும் மடக்கிப் பிடித்தார் ராஜேந்திர பிரசாத். பிடிபட்டவர்கள் அப்துல்ரஷீது(40), கருணாநிதி(43) என்பதும், அயனாவரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விசார ணையில் தெரியவந்தது.

உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத்தை காவல் ஆணையர் ஜார்ஜ், துணை ஆணையர் சுதாகர் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x