ராம மோகன ராவை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

ராம மோகன ராவை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

பண மதிப்பு நீக்க நட வடிக்கையைக் கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மனிதச்சங்கிலியில் பங்கேற்ற, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:

பண மதிப்பு நீக்கத்தால், மக்கள் பெரும் பாதிப்படைந் துள்ளனர். 50 நாட்களை கடந்த பின்னரும் ஏடிஎம் மையங்களிலும், வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 200- ஐ தாண்டிவிட்டது. மோடியின் அறிவிப்பால் நாட்டில் ரூ.15 லட்சம் கோடி முடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 80 சதவீத பணம் பயன்பாட்டில் இல்லாமல் போனதால் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.

ராம மோகன ராவின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியது சரியான நடவடிக்கைதான். ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மாறுபட்ட கருத்தால் வைகோ விலகியுள்ளார். அதே நேரம் எங்கள் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பலத்துடன் இருக்கின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in