Published : 07 Aug 2016 08:22 AM
Last Updated : 07 Aug 2016 08:22 AM

கடும் சட்டத் திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு மசோதாவுக்கு வரவேற்பும், எதிர்ப்பும்

கடும் சட்டத் திருத்தங்களுடன் உருவாக்கப் பட்டுள்ள சாலை பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் உட்பட பல்வேறு புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சட்டத் திருத்தத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகளில் சராசரி யாக 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 16 பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர். சாலை விபத்து களில் மீட்பு பணிகள், சிகிச்சை உள்ளிட்ட வற்றுக்காக ஆண்டுக்கு ரூ3.8 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. சாலை விபத்துகளை குறைப்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக, உருவாக்கப்பட்ட புதிய கமிட்டி மூலம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருக்கும் நடைமுறைகளை ஆய்வு செய்து வரைவு சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்டது. இந்த சாலை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு கடந்த 3-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இந்த சட்டத் திருத்தத்தில் பல முக்கிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு, போலீஸ் பாதுகாப்பு போன்ற அவசர வாகனங்களுக்கு சாலையில் வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம், அனுமதிக்கப்பட்டதைவிட பெரிய அளவு வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம், உரிமம் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபட்டால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் அபராதம் வசூலிக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம். மேலும் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்பட் டால், சம்பந்தப்பட்ட பெற்றோர் அல்லது பாது காவலராக இருக்கும் உறவினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, “சாலை விபத்துகளை தடுக்க அபராதத் தொகையை அதிகரித்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தம் வரவேற்கக் கூடியது. சட்டம் கடுமையான இருந்தால்தான் சாலை விபத்துகளை குறைக்க முடியும். ஆனால், இதுமட்டுமே போதாது. ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்குவதை தரமாக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பெரிய நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை வாங்க வருவோருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும்’’ என்றார்.

வரிவருவாய் பாதிக்கும்

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘சாலை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவால் மாநில போக்கு வரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்படும். தமிழக அரசுக்கு ஒட்டுமொத்த வரி வருவாயில் 20 சதவீதம் வாகன பதிவு மற்றும் சாலை வரி மூலம் கிடைத்து வருகிறது. இந்த வருவாய் இனி மத்திய அரசுக்கு சென்றுவிடும்.

மேலும், தற்போது, மாநில அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இனி தனியார் நிறுவனங்களும் எல்லா இடங்களிலும் பேருந்து கள் இயக்க அனுமதி அளிக்க அந்த சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை குறைக்க அபராத கட்ட ணங்களை உயர்த்தினால் மட்டும் போதாது, முதலில் தேவைக்கு ஏற்றவாறு சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x