ஆர்.கே. நகரில் 680 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆர்.கே. நகரில் 680 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
Updated on
1 min read

ஆர்.கே.நகர் தொகுதியில் சமுதாய வளைகாப்பை அமைச்சர் வெ.சரோஜா நடத்தி வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நேற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமு தாய வளைகாப்பு விழா நடத்தப் பட்டது. சென்னை, தண்டையார்ப் பேட்டையில் 680 கர்ப்பிணிகள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது.

விழாவில், சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, கர்ப்பிணி பெண்களுக்கு நலங்கிட்டு, மாலை, வளையல் அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி னார். அப்போது அவர் பேசுகை யில், ‘‘கர்ப்பிணித் தாய்மார்க ளின் ஆரோக்கியம், பிரசவம், குழந்தைப்பேறு, வளர்ப்பு போன் றவை குறித்து விழிப்புணர்வும், கவனிப்பும் அளிக்கப்படுவதால், தமிழகம் ஊட்டச்சத்து குறைபாடில் லாத மாநிலமாக முன்னேறும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் சமூக நலத்துறை செயலர் க.மணிவாசன், மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி, பெருநகர சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவ நிபுணர் ஹேமலதா கணேசன், மாவட்ட திட்ட ஒருங் கிணைப்பாளர் ப.ஜெகதீஸ்வரி, சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் க.பிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in